உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் அச்சமடைந்திருக்கிறது. பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், நேற்று இரவு முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழக அரசும் நேற்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், அத்தியாவாசிய பொருட்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. அப்படி மீறி வெளியே செல்பவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள்.
இப்படி கோரோனா அச்சத்தால் மக்கள் அலறிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ் நடிகை ஒருவர் கொரோனா அச்சத்தை கண்டுக் கொள்ளாதம் தனது கணவருடன் கடற்கரையில் கும்மாளம் போட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்தவர் பூஜா. இவர் ‘காஞ்சனா 2’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் பூஜா, தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டது அனைவரும் அறிந்தது தான்.
தற்போது, தனது இரண்டாவது கணவருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள பூஜா, மாலத்தீவு கடற்கரையில் கும்மாளப் போட்டதோடு, அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...