விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விஜயின் தனது புதிய படத்தின் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
விஜயின் 65 வது படமாக உருவாகவுள்ள இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ‘துப்பாக்கி 2’ என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஹீரோயினாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என யாரை வேண்டுமானாலும், தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், என்று இயக்குநர் முருகதாஸிடம், சன் பிக்சர்ஸ் தரப்பு கூறினாலும், இருவரையும் நிரகரித்த முருகதாஸ், தமனே போதும் என்று கூறிவிட்டாராம்.
இதற்கு காரணம், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் இருவரும் அவசரத்திற்கு பணியாற்ற மறுக்கிறார்களாம், இதனால், இருவரையும் முருகதாஸ் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
‘அண்ணாத்தே’ படத்திற்காக அனிருத்தை ரஜினிகாந்த் சிபாரிசு செய்தபோது, இயக்குநர் சிவா, இதே காரணத்தை கூறி தான் அவரை நிராகரித்துவிட்டு டி.இமானை இசையமைப்பாளராக தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...