தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பி, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அப்படத்தில் இடம்பெற்ற “கொலவெறி...” பாட்டு மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி மட்டும் இன்றி, உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். அப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் அனிருத், கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
சிவகார்த்திகேயனின் ‘எதிர் நீச்சல்’ திரைப்படம் அனிருத்தின் இசைக்காகவே ஓடியதாக ரசிகர்கள் கூறினார்கள். இதனால் அனிருத்தின் மார்க்கெட் சரசரவென்று உயர்ந்தது. இதையடுத்த், விஜயின் ‘கைதி’, தனுஷின் ‘மாரி’, விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடி தான்’, அஜித்தின் ‘வேதாளம்’ என்று தொடர் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்ததோடு, சூப்பர் ஹிட் பாடல்களையும், ரசிகர்கள் காலர் ட்யூனாக பயன்படுத்தக் கூடிய பீஜிங்களையும் கொடுத்தார்.
இப்படி தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத், தன்னை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்ட தனுஷிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது படத்திற்கு இசையமைப்பதை நிறுத்திவிட்டார். அதேபோல், தனுஷும் தனது படங்களுக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்வதை நிறுத்திவிட்டார்.
இதற்கிடையே, ’பேட்ட’ படத்தின் மூலம் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற அனிருத், அப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் சூப்பர் ஹிட்டாக்கிட, ரஜினியின் பேவரைட் இசையமைப்பாளராக உயர்ந்துவிட்டார். அப்படத்தை தொடர்ந்து ரஜினியின் சிபாரிசு காரணமாக ‘தர்பார்’ படத்திற்கும் இசையமைத்தார். மேலும், விஜயின் சிபாரிசு காரணமாக ‘மாஸ்டர்’ படத்தின் வாய்ப்பையும் பெற்றார்.
இப்படி ஹீரோக்களின் பேவரைட் இசையமைப்பாளராக உருவெடுத்த அனிருத், தற்போது இயக்குநர்கள் நிராகரிக்கும் இசையமைப்பாளராக உருவெடுத்து வருகிறார். ஆம், அனிருத்துடன் பணியாற்றிய இயக்குநர்கள் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதில் தயக்கம் காட்டுவதோடு, ஹீரோக்கள் சிபாரிசு செய்தாலும், அவரை ஏற்க மறுக்கிறார்களாம்.
தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்தே’ படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக போடலாம் என்று ரஜினிகாந்தும், சன் பிக்சர்ஸும் சிபாரிசு செய்த போதிலும், இயக்குநர் சிவா, அனிருத்தை நிராகரித்து விட்டாராம். ஏற்கனவே ‘வேதாளம்’, ’விவேகம்’ என்று இரண்டு படங்களில் அனிருத்திடம் இணைந்து பணியாற்றியிருக்கும் சிவா, அவசரத்திற்கு தேவை என்றால் அனிருத்தை பிடிக்க முடியாது, அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போது தான் அவரை தொடர்பு கொள்ள முடியும், அதனால் அனிருத் வேண்டாம், என்று கூறியதோடு, டி.இமானை இசையமைப்பாளராக்கி விட்டார்.
இந்த நிலையில், விஜயின் 65 வது படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸும், அனிருத்தை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு தமனை இசையமைப்பாளராக தேர்வு செய்திருக்கிறார். அவரும் அனிருத் பற்றி இயக்குநர் சிவா சொன்ன காரணத்தை தான் கூறியிருக்கிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...