‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மூலம் நடிகராக அறிமுகமான சேதுராமன், சென்னையின் பிரபலமான தோல் மருத்துவராகவும் திகழ்ந்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர், நேற்று இரவு மாரடைப்பினால் மரணமடைந்தது தமிழ் சினிமாவையும், மருத்துவ துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பால் தமிழகமே முடங்கி போயிறுக்கும் நிலையில், இதுபோன்ற திடீர் மரணங்களால் தமிழகம் மேலும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
27 வயதுடைய நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மரணம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பிரபல எழுத்தாளர் பத்மா, ”ஆறு நாள் முன்னால் கூட டாக்டர் சேதுராமன் பேசிய நேர்காணலை கேட்டேன். கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசியிருந்தார். ஆனால், இன்று அவர் இல்லை. மாரடைப்பால் அவர் இறந்து விட்டார் என்று நம்ப முடியவில்லை. சேதுராமன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.” என்று சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆறு நாள் முன்னால் கூட டாக்டர் சேதுராமன் பேசிய நேர்காணலை கேட்டேன் .கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசி இருந்தார். ஆனால் இன்று அவர் இல்லை மாரடைப்பால் இறந்து விட்டார் என்று நம்ப முடியவில்லை ..சேதுராமன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறான் pic.twitter.com/byTH7pgxDm
— WriterVPadmavathy (@padmavathyvae) March 26, 2020
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...