நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தது திரையுலகையும், மருத்துவ துறையையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 37 வயதுடைய சேதுவின் இந்த திடீர் மரணம் ஒரு புறம் இருக்க, இந்தியா முழுதும் அமலில் உள்ள 144 தடை உத்தரவால், நேற்று நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது நண்பர்களால் பங்கேற்க முடியவில்லை, என்பது மற்றொரு சோகம்.
பிரபல மருத்துவர் என்பதால், சேதுவுக்கு மருத்துவ துறையிலும், சினிமா துறையிலும் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், நேற்றிய இறுதி ஊர்வலத்தில் யாராலும் பங்கேற்க முடியவில்லை. சேதுராமனின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம், சேதுவின் இறுதி சடங்கில் பங்கேற்றதோடு, அவரது இறுதி ஊர்வலகத்திலும் பங்கேற்றார்.
சேது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிய போது, அவரது உறவினர் அழுதவாறே, “அவனுக்கு ஆடி காரும், பென்ஸ் காரும் தானே பிடிக்கும், இப்படி ஆம்புலன்ஸில் எடுத்து செல்கிறீர்களே” என்று கூறியது, அங்கிருந்தவர்களை கலங்க வைத்துவிட்டது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...