உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் தீவிரம் பெற்று வரும் இந்த நோய் தாக்குதலுக்கு பல்வேறு பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், ஹாலிவுட்டை சேர்ந்த நடிகர்கள் இதிரிஸ் எல்பா, கிரிஸ்டோபர் கிரிஜூ, நடிகை இந்திரா வர்மா, இட்ச்யார் இட்னோ என பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஹாலிவுட் நடிகர் மார்க் கிளம்ப், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியாள் ஹாலிவுட் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
1970 ஆம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மார்க் கிளம்ப், தற்போது டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.

69 வயதாகும் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டதாக ஹாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...