விக்ரமின் ‘தூள்’ படத்தில் “சிங்கம் போல...” என்ற பாட்டு பாட்டியதோடு, அப்படத்தில் விக்ரமின் பாட்டியாகவும் நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. பிரபல கிராமத்து பாடகியான இவர், சினிமாவில் அறிமுகமான பிறகு தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.
’தூள்’ படத்தை தொடர்ந்து ‘தோரணை’, ‘சண்ட’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தும், பாட்டு பாடியும் வந்த பரவை முனியம்மா, நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.
இதற்கிடையே, கடந்த பல நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களுக்கு பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா, சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...