இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமா தான், என்ற நிலை தற்போது மாறிவிட்டது. தென்னிந்திய திரைப்படங்களும் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களின் மார்க்கெட் மிகப்பெரிய அளவி வளர்ந்துள்ளது.
அந்த வகையில், உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ்த் திரைப்படங்கள் கொண்ட பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் எப்போதும் போல, ரஜினி மற்றும் விஜய் முதல் இரண்டு இடங்களை பிடிக்க அஜித், கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக ரசிகர்கள் பல முறை சமூக வலைதளங்களில் தெரிவித்தாலும், படத்தை தயாரித்தவர்களும், விநியோகம் செய்தவர்களும், விஸ்வாசம் இறுதி வசூல் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், வசூல் பட்டியலில் அஜித் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இதோ அந்த பட்டியல்:
1. 2.0- ரூ 675 கோடி
2. பிகில்- ரூ 300 கோடி
3. கபாலி- ரூ 289 கோடி
4. எந்திரன் - ரூ 286 கோடி
5. சர்கார்- ரூ 255 கோடி
6. மெர்சல்- ரூ 250 கோடி
7. பேட்ட- ரூ 215 கோடி
8. ஐ- ரூ 213 கோடி
9. தர்பார்- ரூ 210 கோடி
10.விஸ்வாசம்- ரூ 183 கோடி
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...