உலகியே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் பரவமால் தடுக்க, இந்தியா முழுவதும் வரும் மார்ச் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாலும், அத்தியாவாச தேவைகள் மக்களுக்கு கிடைக்கும் வகையில், சில கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையில் மாநகராட்சிகள் ஈடுபட்டு வருகிறது.
பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும், ஏழை எளியோருக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். அதன்படி, சினிமா துறை தொழிலாளர்களுக்கு பல முன்னணி நடிகர், நடிகைகள் பண உதவி மற்றும் பொருள் உதவி செய்து வருகிறார்கள்.
இப்படி அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி கிடைத்து வரும் நிலையில், திருநங்கைகளை மட்டும் இதுவரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் உணவுக்கே சிரமப்படும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த மலையால சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க கூடிய மஞ்சு வாரியர், முதல் ஆளாக திருநங்கைகளுக்கு உதவி செய்திருக்கிறார்.

தனது மேக்கப் மேன் மூலம், திருநங்கைகள் கஷ்ட்டப்படுவதை அறிந்த நடிகை மஞ்சு வாரியர், ரூ.35 பண உதவி செய்திருக்கிறார். அதை வைத்து அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மஞ்சு வாரியரின் இந்த உதவியை அறிந்து பலர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
மேலும், மலையாள நடிகர் சங்கத்திற்கு மஞ்சு வாரியர் ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...