பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே ரம்யா, ‘ஆடை’ படத்தில் அமலா பாலுக்கு தோழியாக நடித்ததை தொடர்ந்து, விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதோடு, ‘சங்கத்தலைவன்’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ரம்யா, வெயிட் லிப்டிங் விளையாட்டிலும் ஈடுபட்டு வருபவருக்கு தனி ரசிகர் வட்டமே இருக்கிறது. இதனால், சமூக வலைதளம் மூலம் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, தனது வாழ்க்கையில் எது நடந்தாலும், அதை ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.
இந்த நிலையில், ரம்யா வீட்டில் வளர்த்த செல்ல நாய் உயிரிழந்துவிட்டதாம். இதனால், பெரும் சோகத்தில் இருக்கும் ரம்யா, அந்த சோகத்தையும், நாய் உயிரிழந்த விஷயத்தையும், சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
இதோ அந்த பதிவு,
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...