நடிகர், இயக்குநர், கவிஞர் என்று பன்முக திறன் கொண்ட இ.வி.கணேஷ்பாபு, இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘கட்டில்’. பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வைரமுத்து மற்றும் மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்கள். வைட்ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.
கொரோனா பாதிப்பால் தற்போது ’கட்டில்’ படப்பிடிப்புக்கு தடை ஏற்பட்டிருந்தாலும், அதை கண்டுக்கொள்ளாமல் கரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும், என்ற நோக்கத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு கவிதைப் போட்டியை ‘கட்டில்’ படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இப்படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே மூலம் அறிவிக்கப்பட்ட இக்கவிதை போட்டியில், கலந்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 20 நபர்களுக்கு கவிதை நூல்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள், 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும் பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்.
பிரபல கவிஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான கவிதைகளுக்கு, விரைவில் நடைபெற இருக்கும் ’கட்டில்’ திரைப்பட (Audio Release) பாடல் வெளியீட்டு விழாவில் பரிசு தொகை காசோலையாக வழங்கப்படும் என்று கட்டில் திரைப்படத்தின் கதாநாயகி சிருஷ்டி டாங்கே தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ‘கட்டில்’ படக்குழு அறிவித்த கொரோனா விழிப்புணர்வு கவிதைப் போட்டிக்கான கவிதைகள் வந்து சேர வேண்டிய கால அவகாசம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...