நாடே ஊரடங்கு உத்தரவில் முடங்கி போயிருந்தாலும், சிலர் மட்டும் ஊரடங்கை உதாசினப்படுத்தும் வகையில் அவ்வபோது வெளியே தலை காட்டி வருகிறார்கள். அத்தியாவாசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வரலாம், ஆனாலும் ஒருவரிடம் ஒருவர் சுமார் 3 மீட்டர் தூரம் இடைவெளி விட வேண்டும், என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
அதேபோல், சாதாரணமான மற்றும் சிறிய கடைகள் திறக்க அனுமதி அளித்திருக்கும் அரசு சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய மற்றும் ஏசி வசதி உள்ள கடைகள் திறக்க அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் அதிரடி போட்டியாளரான வனிதா, ஊரடங்கு உத்தரவிலும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஷாப்பிங் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக திகழந்த வனிதா, தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த சேனலின் செயல்பாடு தொடங்குவதற்குள் கொரோனா பிரச்சினை தொடங்கியது. இதனால் பலர் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.
ஆனால், நடிகை வனிதாவோ வீட்டுக்குள் முடங்காமல், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கூலாக ஷாப்பிங் செய்துக் கொண்டிருப்பதோடு, அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகிறார். மாஸ்க், கிளவு என பாதுகாப்பு அம்சங்களை அணிந்துக் கொண்டு வனிதா ஷாப்பிங் செய்தாலும், இந்த சூழலில் இப்படி ஒரு ஷாப்பிங் தேவையா? என்று நெட்டிசன்கள் வனிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், நீங்க எதற்கு மாஸ்க் அணிகிறீர்கள், பேசினாலே கொரோனா ஓடிவிடும், என்று பலர் கலாய்ப்பதோடு, அத்தியாவாசிய தேவைகளுக்காக அருகில் உள்ள கடைகளுக்கு மக்கள் செல்லலாம், என்று அரசு அறிவித்ததை, தவறாக பயன்படுத்தும் விதமாக, தனது யுடியுப் சேனலுக்காக ஷாப்பிங் செய்யும் வனிதாவின் இந்த வேலையை பலர் தவறு என்றே சொல்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...