நாடு முழுவதும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கூலித்தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களுக்கு நிவாரண நிதி அளிப்பது மற்றும் கொரோனா மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நிதிக்காக பிரதமர் மோடி, மக்களிடமும், பிரபலங்களிடமும் நிதி கேட்டுள்ளார். அதேபோல், தமிழக அரசும் கொரோனா முதலமைச்சர் நிவாரணநிதிக்கு நிதியளிக்கலாம், என்று அறிவித்துள்ளது.
அதன்படி, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் தமிழக அரசின் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, நிதி அளித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் யாரும் நிதியளிக்காமல் மவுனமாக இருந்த நிலையில், முதல் நபராக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்த முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே, பெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.10 லட்சம் நிதியளித்திருக்கும் சிவகார்த்திகேயன், சினிமா பத்திரிகையாளர்களுக்காக, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...