மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாளப் படமான ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்றுள்ள “ஜிமிக்கி கம்மல்...” என்று தொடங்கும் பாடலுக்கு நடன ஆடி அதை யுடியூபில் வெளியிடுவது டிரெண்டாகி வருகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி இந்த பாடலுக்கு இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி அதை வீடியோவாக இணையதளத்தில் வெளியிட்டனர். பெரும் வரவேற்பு பெற்ற அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே, அந்த வீடியோவில் முன் வரிசையில் நடனமாடிய ஷெரில் என்ற ஆசிரியர் மிகவும் பிரபலமடைந்துள்ளார். அவரை பல மீடியாக்கள் தேடிச் சென்று பேட்டி எடுத்து ஒளிபரப்பி வருவதோடு, மலையால பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகிறதாம்.
மலையாளப் படங்களில் நடிக்க மறுத்துள்ள ஷெரில், ஒரு பேட்டில் தனது நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும், என்று கூறியதோடு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன், என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாலகிருஷ்ணாவை வைத்து படம் இயக்கும் கே.எஸ்.ரவிகுமார், அப்படத்திற்கு பிறகு விஜயை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறாராம். இப்படத்தில் ஜிமிக்கி கம்மல் ஷெரிலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது அதிகாரப்பூவமான தகவல் இல்லை என்றாலும், தற்போது ஜிமிக்கி கம்மல் ஷெரில் போலவே, இந்த தகவலும் வைரலாக பரவி வருகிறது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...