‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சுனைனா, ’மாசிலாமணி’, ‘வம்சம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றி பெறாததால், அவருக்கு தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, கடந்த கடந்த ஆண்டு வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த சுனைனாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது ’ட்ரிப்’, ‘எரியும் கண்ணாடி’ ஆகிய தமிழ்ப் படங்களில் சுனைனா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சுனைனா தமிழ் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நடிகர் கிருஷ்ணா தான். இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரரான கிருஷ்ணா, ’அலிபாபா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கிருஷ்ணா, ’கழுகு’ என்ற படம் மூலம் பிரபலமானார். தற்போது ‘கழுகு 2’ வில் நடித்து முடித்திருக்கும் கிருஷ்ணா, மலையாளப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

நடிகர் கிருஷ்ணாவும், நடிகை சுனைனாவும் சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில், இன்னும் மூன்று மாதத்தில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஹேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் கிருஷ்ணா, 2016 ஆம் ஆண்டே அவரை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...