கொரோனா வைரஸ் பாதிப்பால், தற்போது நாட்டின் பல துறைகள் முடங்கியுள்ளது. அதன்படி, சினிமா படப்பிடிப்புகள் மற்றும் புதுப்படங்களில் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சினிமா துறைக்கும், அதில் முதலீடு செய்திருப்பவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே உருவாகியிருக்கும் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தங்களது சம்பளத்தில் சுமார் 30 சதவீதம் குறைத்துக் கொண்டால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு உதவியாக இருக்கும் என்றும், என்று பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வடிக்கு பணம் கொடுக்கும் பைனான்சியர்களும், வட்டி தொகை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும், என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வெளியிட்டிருக்கும் கோரிக்கையில், “தற்போது தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், திரைக்கு வர இருக்கும் திரைப்படங்களின் கதாநாயகர், கதாநாயகி, இயக்குநர், இசையமைப்பாளர், கேமிராமேன், மற்றும் முக்கியமான டெக்னிஷியன்கள், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து குறைந்த பட்சம் 30% சம்பளத்தை விட்டுக்கொடுத்து இந்த கடுமையான சூழலில் தயாரிப்பாளர்களுக்கு தோள்கொடுத்து பக்கபலமாக இருந்து உதவ வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இந்த காலக்கட்டத்தில் யாரும் 3 மாதங்கள் வட்டியோ, இஎம்ஐ&யோ வாங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கும், மற்ற நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் திரைத்துறை பைனாஸ்சியர்களு ஒரு வேண்டுகோள். தயாரிப்பாளர்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த காலச்சூழ்நிலை முற்றிலும் மாறி இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அதாவது 2 மாதங்களோ, 3 மாதங்களோ அல்லது 4 மாதங்களோ அதுவரை வட்டி தொகையினை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மிகத் தாழ்மையுடன் வேண்டுகோளை வைக்கிறேன். அப்படி செய்யும்பட்சத்தில் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சுமை, பயம் அகலும். இயல்பு நிலை திரும்பியதும் நல்லமுறையில் படத்தினை முடித்து வெளியிட மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
இந்த ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக்கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ரீ&ரிலீஸ் செய்வதற்கு முன்னுரிமைக் கொடுத்து, உதவ வேண்டும் என்று தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன். சிறிய படங்கள் நிறைய திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, இயல்புநிலை திரும்பியதும் சிறிய பட்ஜெட் படங்கள், அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் என்று மாறி மாறி வெளியாகும் வகையில் காலச்சூழலை உருவாக்கி சிறு தயாரிப்பாளர்களை வாழ வைப்பதற்கு தியேட்டர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் துணைநிற்க வேண்டும்.
இந்த வேண்டுகோள் அனைத்தும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் எண்ணம். அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர்களின் மனநிலையை உணர்ந்து இங்கே பதிவு செய்கிறேன்.
இந்த வேண்டுகோள்களுக்கு தயவுகூர்ந்து சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்கள் செவிசாய்த்து தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்குமாறும், இந்த நேரத்தில் நாம் ஒருத்தருகொருத்தர் தோள்கொடுத்து, உறுதுணையாக இருந்து... இந்த சூழலை முற்றிலும் முறியடிக்க பக்கபலமாக இருந்து, உதவுமாறும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பில் மிக மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தயாரிப்பாளர் சதீஷ்குமார் இந்த வேண்டுகோளை முன்னணி நடிகர்கள் ஏற்பார்களா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...