தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் இருவரில் யார் நம்பர் ஒன், என்ற போட்டி நிலவி வருகிறது. இதனால், இருவருடைய ரசிகர்களும் அவ்வபோது மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சில சினிமா பிரபலங்கள் விஜய் தான் நம்பர் ஒன் என்று, பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
படன்களின் வசூலை வைத்து, யார் நம்பர் ஒன், என்பதை சிலர் கூறி வந்தாலும், அவர் அவர் ரசிகர்கள் தங்களது பேவரைட் நடிகர்களை விட்டுக் கொடுக்காமல் அவர்களது பெருமைகளைப் பற்றி அவ்வபோது பேசி வருகிறார்கள். இப்படி பேசுவது சாதாரண ரசிகர்கள் மட்டும் இன்றி, பிரபலமாக இருப்பவர்களும் அவ்வபோது விஜய் மற்றும் அஜித் குறித்து பேசி வருகிறார்கள்.
அதன்படி, தீவிர அஜித் ரசிகையான பிரபல காமெடி நடிகையும், பிக் பாஸ் பிரபலமான ஆர்த்தி, எப்போதும் அஜித் குறித்து பெருமையாக பேசுவதோடு, அவ்வபோது விஜயை சமூக வலைதளத்தில் கலாய்க்கவும் செய்வார். அதற்காக விஜய் ரசிகர்கள் அவரை கலாய்த்தாலும், கெத்தாக அவர்களுடன் மள்ளுக்கட்டி வருவார்.
இப்படி அஜித்தின் தீவிர ரசிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகை ஆர்த்தி, விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ஆம், சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நடிகை ஆர்த்தியிடம், விஜய் பற்றி எதாவது கூறுங்கள், என்று ஒருவர் கேட்க, அதற்கு அவர் “அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகையின் இந்த ஓபன் டாக்கால் விஜய் ரசிகர்கள் குஷியடைந்திருப்பதோடு, ஆர்த்தியின் இந்த ஸ்டேட்மெண்டை வைரலாக்கியும் வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...