டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக வெப் சீரிஸ் என்ற இண்டர்நெட் தொடர்கள் மக்களிடம் பிரபலமாகி வருகிறது. தணிக்கை உள்ளிட்ட எந்தவித கட்டுப்பாடுகளும் வெப் சீரிஸ்களுக்கு இல்லை என்பதால், பல சர்ச்சையான விஷயங்களை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸ்கள், ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனங்கள் நிறைந்தவைகளாக இருக்கின்றன. இதனால், இளசுகளிடம் பெரும் வரவேற்பு பெற்றுவிடுகிறது. இதற்காக திரைப்படங்களுக்கு நிகராக சில வெப் சீரிஸ்கள் தயாரிக்கப்படுவதோடு, முன்னணி இயக்குநர்கள், நடிகர், நடிகைகளும் வெப் சீரிஸ்களில் பணியாற்ற ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரிஸில், ஜெயலலிதாவின் பள்ளி பருவம், அவர் நடிகையாக இருந்தது மற்றும் அரசியல் வாழ்க்கை என்று மூன்று காலக்கட்டங்களை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
இதில், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை எப்பிசோட்டில், ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். பள்ளி பருவ ஜெயலலிதாவாக அனிகா சுரேந்தரும், நடிகை ஜெயலலிதாவாக அஞ்சனாவும் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் வேடத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் நடித்திருக்கிறார்.
தமிழ் இணைய தொடர்களில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற தொடர்களில் ஒன்றான ‘குயின்’ தொடரை தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த பல முன்னணி தொலைக்காட்சிகள் குயின் வெப் சீரிஸை கைப்பற்ற போட்ட போட்டி போட்ட நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகைக்கு குயின் வெப் சீரிஸை கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...