Latest News :

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் ‘குத்தூசி’
Monday September-18 2017

ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்து இயக்குனர் சிவசக்தி இயக்கியிருக்கும் படம் ’குத்தூசி’. ‘வத்திகுச்சி’ திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும் இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார்.

 

இதுவரை தமிழ்சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்கள் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த குத்தூசி திரைப்படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.

 

நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று ஒவ்வொரு விவாசாயியும் நினைத்ததால்தான் அவர்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லாமல் செய்துவிட்டார்கள். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என உலகநாடுகள் அறியும். விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பது அரிதாவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும் கூறியிருக்கிறார் இயக்குநர் சிவசக்தி.

 

இப்படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலை பகுதி மற்றும் சென்னையில் மொத்தம் 54 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

 

காதல், ஆக்‌ஷன், எமோஷன் என கமர்ஷியலாகவும் மக்களுக்கு பிடிக்கும் வகையாக குத்தூசி உருவாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

 

எம்.கண்ணன் இசையமைக்கும் இப்படத்திற்கு பாஹி ஒளிப்பதிவு செய்ய, கவிஞர் அண்ணாமலை பாடல்கள் எழுதியுள்லார். ஜெ.வி.மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்ய வீருசரண் வசனம் எழுதியுள்ளார். ராஜசேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராதிகா, சங்கர் ஆகியோர் நடனத்தை வடிவமைத்துள்ளனர். இணை தயாரிப்பை த.கணேஷ் ராஜா மேற்கொண்டுள்ளார்.

Related News

639

‘கொம்பு சீவி’ பட இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் வைத்த கோரிக்கை!
Tuesday December-16 2025

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

Recent Gallery