மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நாட்டின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், சினிமா துறையும், அத்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், முன்னணி நடிகர், நடிகைகள் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார்கள்.
அதன்படி, தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், தென்னிந்திய திரையுலக தொழிலாளர்கள் சம்மேளமான பெப்ஸி அமைப்பு, நிதி திரட்டி வருகிறது. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று ஏராளமானோர் பெப்ஸி அமைக்கு நிதியாகவும், பொருளாகவும் உதவி செய்து வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அதேபோல் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ரூ.10 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள். மேலும் பல நடிகர்கள் பெப்ஸி அமைப்புக்கு அரிசி மூட்டைகளை நன்கொடையாக வழங்கினார்கள்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, பெப்ஸி அமைப்புக்கு ரூ.20 லட்சம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...