2008 ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சுனைனா, தற்போது ஹீரோயினாக நடிப்பதோடு, வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த வருடன் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த சுனைனாவின் நடிப்பு பெரிதும் பாராட்டு பெற்றது. தற்போது ‘ட்ரிப்’ என்ற படத்தில் சுனைனா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாய் ஒன்று தன்னை கடித்து கொதறுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஆனால், இது நிஜமான வீடியோ அல்ல, ட்ரிப் படத்தின் படப்பிடிப்பு ஆகும். ட்ரிப் படத்திற்காக காட்டில் சிக்கிக் கொள்ளும் சுனைனா, அமெரிக்கா ரக பிட்புல் நாய்யிடம் கடிவாங்குவது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் டூப் ஏதும் இல்லாமல் சுனைனா ரியலாக நாயிடம் கடி வாங்கி நடித்திருக்கிறார். அந்த வீடியோவை தான் அவர் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...