தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பா.ஜ.க-வை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகனை தான் கீர்த்தி சுரேஷுக்கு பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.
சினிமாவில் பிஸியாக இருக்கும், அதுவும் இந்த இளம் வயதிலேயே கீர்த்தி சுரேஷுக்கு திருமணம், என்ற இந்த செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது. அதே சமயம், இது வதந்தியா அல்லது உண்மையா, என்ற குழப்பமும் நிலவி வந்தது. ஆனால், இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பிடம் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை.
இந்த நிலையில், தனது திருமணம் பற்றி மனம் திறந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், இந்த செய்தி எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. இப்படி ஒரு வதந்தி எங்கிருந்து தொடங்கியது என்று தெரியவில்லை. எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...