பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருக்கும் நடிகை வனிதாவை, பலர் செல்லமாக அக்கா என்று அழைக்கிறார்கள். கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கூலாக ஷாப்பிங் செய்த வனிதா, வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
யுடியுப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கும் வனிதா, அதன் மூலம் உணவு வகைகளை சமைத்துக் காட்டப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, வனிதா விஜயகுமார் என்ற பெயரில் யுடியுப் சேனலை தொடங்கியிருப்பவர், அதில் கொரோனாவை விரட்டுவதற்காக நெல்லிக்காய் கசாயம் ஒன்றை சமைத்துக் காட்டினார்.

இஞ்சி, மஞ்சல், மிளகு, தேன் ஆகியவற்றை நெல்லிக்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் தயார் செய்த வனிதா, அதை தனது தோழிகளுடன் சேர்ந்து குடிக்கும் போது, டக்கிலா என்று மதுவை குடிக்கும் போது, முதலில் உப்பை சுவைத்துவிட்டு பிறகு டக்கிலாவை குடிப்பார்களே அதுபோல குடித்ததால், ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
ஆம், கசாயத்தை தயார் செய்த வனிதா, அதை தோழிகளுக்கு கொடுக்கும் போது, அவர்கள் கையில் உப்பை கொடுத்து, இதை வேற ஸ்டைலில் குடிக்க வேண்டும், என்று சொல்ல, அதற்கு அவரது தோழிகள் சிரித்தவாரே, காசாயத்தை குடித்தார்கள்.

இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கசாயத்தை கூட இப்படி மது வகையான டக்கிலா போல குடிக்கும் அக்காவின் ஸ்டைல் தனி ஸ்டைல் தான், என்று வனிதாவை கலாய்த்து வருகிறார்கள்.

அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...