15 வயதில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய லட்சுமி மேனன், படிப்பையும் தொடர்ந்தவாறு நடித்துக் கொண்டிருந்தவருக்கு தொடர் வெற்றிகள் கிடைத்ததால் வாய்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியது. இருந்தாலும், படிப்பை விடாமல் ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் படிப்பு என்று இருந்தவருக்கு ஹோம்லியான வேடங்கள் மட்டுமே சூட்டாகும் என்பதால், முன்னணி ஹீரோயினாகும் வாய்ப்பு இருந்தும் அது நடக்காமல் போனது. ஆனால், முன்னணி ஹீரோயின்களுக்கு நிகராக தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தார்.
இதற்கிடையே, லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் வருவது திடீரென்று குறைய தொடங்கியது. இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு வெளியான ‘றெக்க’ படத்திற்குப் பிறகு லட்சுமி மேனனுக்கு வேறு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் கேரளாவுக்கு திரும்பியவர் அங்கு நடன பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த அவரது பெற்றோர், அவருக்கு டாக்டர் மாப்பிள்ளையை பேசி முடித்ததோடு, விரைவில் திருமணம் செய்யவும் திட்டமிட்டிருந்தார்கள்.
இந்த நிலையில், லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் பட வாய்ப்பு கிடைத்ததால், திருமணத்தை தள்ளி வைக்குமாறு தனது பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் லட்சுமி மேனன், தனக்காக பார்த்த டாக்டர் மாப்பிள்ளையின் தொடர்பில் இருந்தும் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...