கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வந்தாலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் இன்னும் 2-ம் கட்டத்திலேயே இருக்கிறது. இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதோடு, வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவடையும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சினிமா தொழிலும், தொழிலாளர்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
சினிமா தொழிலாளர்களின் பாதிப்பு ஒரு பக்கம் இருக்க, கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்களின் மரணம் தொடர் கதையாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குநருமான விசு, இளம் நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமன், மலையாள இசையமைப்பாளர் அர்ஜுனன், பிரபல பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா என தென்னிந்திய சினிமா பிரபலங்களின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகையான ஸ்ரீலட்சுமி கனகலா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை ஸ்ரீலட்சுமி கனகலா, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
‘ராஜசேகர சரித்திரா’, ‘ருத்ர கீதம்’, ‘சூப்பர் மாம்’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான ஸ்ரீலட்சுமி, ஹைதராபாத்தில் தனது குடும்பத்தாருடன் வசிடித்து வந்தார். கடந்த பல மாதங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர் நேற்று உயிரிழந்தார்.
உயிரிழந்த ஸ்ரீலட்சுமிக்கு பெடி ராம ராவ் என்ற கணவரும் ராகலீனா, பிரேர்னா ஆகிய மகள்களும் இருக்கிறார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...