கொரோனா பாதிப்பால் அரசு மேற்கொண்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கையால் சினிமா துறை பாதிக்கப்பட்டிருப்பதோடு, அதை சார்ந்த சினிமா பத்திரிகையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நிறுவனம் சாராத ப்ரீலான்ஸர் பத்திரிகையாளர்கள், சொந்தமாக இணையதளம் நடத்துபவர்கள், யுடியுப் சேனல், சினிமா வார இதழ் மற்றும் சினிமா மக்கள் தொடர்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பெப்ஸி அமைப்பு நிதி திரட்டி வருவது போல, பாதிக்கப்பட்ட சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவ, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கங்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, தயாரிப்பாளர் பெப்ஸி சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் சினிமா சங்கங்களுக்கும், மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்திற்கும் நிதி வழங்கினார்கள்.
இதற்கிடையே, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு முன்னணி நடிகர்கள் யாரும் நன்கொடை வழங்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக தமிழ சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் பெப்ஸிக்கும் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடை வழங்காததால், விமர்சிக்கப்பட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், நடிகர் அஜித் சினிமா தொழிலாளர்கள், சினிமா பத்திரிகையாளர்கள், சினிமா பி.ஆர்.ஓ-க்கள் மட்டும் இன்றி நாட்டு மக்களுக்கும் உதவி செய்யும் வகையில் நன்கொடையை வாரி வழங்கியிருக்கிறார்.
ஆம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கிய அஜித்குமார், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பெப்ஸி அமைக்கு ரூ.25 லட்சமும், சினிமா பி.ஆர்.ஓ-க்கள் சங்கத்திற்கு ரூ.2.50 லட்சமும், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு தலா ரூ.2.50 லட்சமும் வழங்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...