Latest News :

சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு உதவிய பிரபலங்கள்!
Wednesday April-08 2020

கொரோனா எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் மத்திய, மாநில அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால்,சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு.,  65 ஆண்டு பாரம்பரியமும் 200 உறுப்பினர்களையும் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில், இக்கட்டான இச்சூழலில், எதுவும் செய்ய இயலாத சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி வேண்டி பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது!

 

அதற்கு உடனடியாக  தயாரிப்பாளர்  கலைப்புலி எஸ்.தாணு, அவரைத் தொடர்ந்து  நடிகர்கள்  கார்த்தி சிவக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன், நட்டி நட்ராஜ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் 'தமிழரசன் '  பட தயாரிப்பாளரும், பெப்சி அமைப்பின்  முன்னாள் செயலாளருமான பெப்சி சிவா, 'கட்டில்' படத்தை இயக்கி,  கதாநாயகராகவும் நடித்து வரும் கணேஷ்பாபு., உள்ளிட்டோர் தங்களால் இயன்ற பெருவாரியான பொருள் மற்றும் பண உதவிகளை சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு செய்துள்ளனர். 

 

இந்நிலையில் ஓட்டுமொத்த சினிமா சங்கங்களின் கூட்டமைப்பான பெப்சி, தாயுள்ளத்துடன் சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவ முன்வந்து நமது சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு ரூ.25 ஆயிரம் உதவியது.

 

FEFSI

 

நடிகர் அஜீத்குமார் யாருமே எதிர்பாராத வகையில் பிரதமர் மற்றும் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கிய கையோடு பெப்சி அமைப்புக்கு 25 லட்சம் அறிவித்துவிட்டு நமது சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் வங்கி கணக்கிலும் தயாளகுணத்துடன் ரூபாய் 2.50 லட்சம் செலுத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து, சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி ரூ.10 ஆயிரம் உதவியுள்ளார்.

 

Ajith

 

மேலும், வினியோகஸ்தர்கள் அமைப்பைச் சார்ந்த பொறுப்பாளர்கள் அருள்பதி, படூர் ரமேஷ், தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரன் மூவரும் இணைந்து 20X10kg அரிசி மூட்டைகளையும், தயாரிப்பாளர் 'ஆக்ஸிஸ் பிலிம்ஸ்' டில்லிபாபு , 18X25kg மூட்டைகளையும் 'பலூன்' பட இயக்குனநரும், சந்தானம் நடிக்கும்  'டிக்கிலோனா' படத்தின் லைன் புரடியூசருமான 'சோல்ஜர்ஸ் பேக்டரி' சினிஷ் 50 X 5 kg அரிசி மூட்டைகளையும் வாரி வழங்கி உதவியுள்ளனர்.

 

Cinema

 

இவர்களைப் போன்றே இன்னும் சில பல சினிமா பிரபலங்களும் நம் சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிட முன்வந்தபடியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சினிமா பத்திரிகையாளர் சங்கம் பெரும் நன்றி தெரிவித்து கொள்கிறது.

 

Help

Related News

6405

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery