உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சாமாணிய மக்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரை அச்சம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இந்திய திரையுலகை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் சினிமா பிரபலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திரும்பிய கரீம் மொரானியின் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட, அவரை தொடர்ந்து அவரது சகோதரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் தனி தனி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது குடும்பத்தார் 9 பேரை தனினைப்படுத்தி பரிசோதித்த போது கரீம் மொரானிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், 60 வயதுக்கு மேல் இருக்கும் கரீம் மொரானிக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருப்பதால், அவரது குடும்பத்தாரும், பாலிவுட் சினிமாவும் பெரும் கவலை அடைந்துள்ளது.

ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ’தில்வாலே’, ‘ஹாப்பி நியூயர்’, ‘ரா ஒன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கரீம் மொரானி தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...