தொலைக்காட்சி சீரியல் மூலம் அறியப்பட்ட கவின், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானதோடு, தனக்கான ரசிகர்கள் வட்டத்தையும் பெற்றார். தற்போது கவினுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்மி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 3-யில் முக்கியமான போட்டியாளராக வலம் வந்த கவின், தற்போது மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில், ஒன்றான ‘லிப்ட்’ படத்தின் பஸ்ட் லும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. இதனால் கவின் சந்தோஷமடைந்தார்.
லிப்ட் பஸ்ட் லுக் மூலம் சந்தோஷமடைந்த கவின் தற்போது மற்றொரு திரைப்படம் மூலம் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கவின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “’மிராக்கல் செல் நம்பர் 7’(Miracle Cell No.7) என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு இடைவிடாமல் அழுதுக் கொண்டிருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கொரியன் திரைப்படமான ’மிராக்கல் செல் நம்பர் 7’ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. கொரியன் சிறைச்சாலையில் உள்ள தனத் தோழரையும், அவரது குழந்தையையும் பாதுகாப்பதற்காக சிறைக்கைதிகள் போராடுவது தான் இந்த படத்தின் கதை.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...