தேசிய ஊரடங்கை தொடர்ந்து, பல்வேறு துறைப் பணிகள் முடங்கி போயிருக்கிறது. அதில் ஒன்று சினிமாத் துறை ஆகும். இதனால், பெரும்பாலான சினிமா பிரபலங்கள் தங்களது வீடுகளில் இருப்பதோடு, வீட்டில் இருந்தவாறு தினமும் எதாவது வீடியோ ஒன்றை வெளியிட்டு, கொரொனா விழிப்புணர்வு என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரபல குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர் ரியாஸ்கானுக்கு 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது வீட்டுக்கே வந்து மிரட்டியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் என்ற பகுதியில் ஆதித்யாராம் நகரின் 8 வது தெரிவில் குடும்பத்துடன் நடிகர் ரியாஸ்கான் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இவரது வீட்டு அருகே சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம்.
இதைப்பார்த்த ரியாஸ்கான், ஊரடங்கு அமலில் இருக்கும் போது இப்படி கூட்டமாக நின்று பேச வேண்டாமே, என்று அவர்களிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரியாஸ்கானை தாக்க முயன்றிருக்கிறார்கள். மேலும், அவர்கள் ரியாஸ்கானுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் நடிகர் ரியாஸ்கான் புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார், ரியாஸ்கானை மிரட்டியவர்கள் யார்? என்று விசாரித்து வருகிறார்களாம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...