தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான விக்ரம், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ படத்தில் நடிப்பவர், அதில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.
இந்த நிலையில், நடிகர் விக்ரம் நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாகவும், தனது மகன் துருவ் விக்ரமை தமிழ் சினிமாவில் பெரியாளாக்குவதற்காக, நடிப்பதை நிறுத்த முடிவு செய்திருப்பதாக, ஊடகன் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை மறுத்திருக்கும் விக்ரம் தரப்பு, இதுபோன்ற பொய்யான செய்திகளை எதற்காக வெளியிடுகிறார்கள், என்று தெரியவில்லை. விக்ரம் நடிப்புக்கு முழுக்கு போடப்போகிறார், என்பது பொய்யான செய்தி. அவர் தற்போது பல படங்களில் நடித்து வருவதோடு, மேலும் சில புதுப்படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இப்படி ஒரு செய்தியை வெளியிடும் முன்பு, அது குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரிக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது, என்று விளக்கம் அளித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...