விஜய் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருவதோடு, இந்திய அளவிலும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம், விஜய் தனது படங்களிலும், படம் சம்மந்தமான நிகழ்ச்சிகளிலும் அரசியல் பேசுவது தான். இதனால், விஜய்க்கு சில சமயங்களில் நெருக்கடிகளும் ஏற்பட தான் செய்கிறது.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் ஆரம்பமாகும் போதே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், படத்தில் கல்வித்துறையில் நடக்கும் மோசடி குறித்து பேசப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தான். மேலும், இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார்.
‘கைதி’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம், படப்பிடிப்பில் இருக்கும் போதே வியாபாரத்தில் மிகப்பெரிய சாதனைப் படைத்தது. சுமாராக இருந்த ‘பிகில்’ திரைப்படம் சுமார் ரூ.250 கோடி வசூல் செய்த நிலையில், ‘மாஸ்டர்’ படத்தை கைப்பற்ற பல விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டியதால், படப்பிடிப்பு முடிவதற்குள் படத்தின் அனைத்து வியாபாரமும் முடிந்தது.
எந்த ஒரு நடிகரின் படத்திற்கு இப்படி ஒரு வியாபாரம் நடந்ததில்லை, என்று கோலிவுட் மட்டும் இன்றி இந்திய சினிமாவே ஆச்சரியப்படும் அளவுக்கு சாதனையோடு தொடங்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் தற்போது மிகப்பெரிய சோதனையில் சிக்கியுள்ளது. ஏற்கனவே பல பிரச்சினைகளை கடந்து படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாரான நிலையில், கொரோனா பாதிப்பால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், சினிமா துறை பழையபடி செயல்பட சுமார் 4 மாதங்கள் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகே திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படம் வெளியாகததால், அதன் மீது முதலீடு செய்த விநியோகஸ்தர் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் முதலீடு செய்திருக்கும் பணத்திற்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்களாம். மேலும், படம் வெளியானாலும் மக்கள் கொரோனா அச்சத்தால் தியேட்டருக்கு வர மாட்டார்கள், என்பதால் எதிர்ப்பார்த்த வசூலும் கிடைக்காது, என்ற தகவல் உலா வர, தங்களது பணத்தை திருப்பிக் கேட்கிறார்களாம்.
விநியோகஸ்தர்களின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்திருக்கும் ‘மாஸ்டர்’ குழு டிஜிட்டல் தளத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாமா, என்று ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தத்தில், விஜயின் ‘மாஸ்டர்’ அவரது சினிமா பயணத்தின் மிகப்பெரிய சோதனையாக அமைந்திருக்கிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...