மக்களிடம் பிரபலமாக இருக்கும் சின்னத்திரை நடிகைகளில் ஒருவர் தான் சித்ரா. இவரை வெறும் சித்ரா என்று சொல்வதை விட ’முல்லை சித்ரா’ என்று சொன்னால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் சட்டென்று நினைவுக்கு வந்துவிடுவார். ஆம், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பெரியவர்கள் முதல்வரை இளசுகள் வரை என அனைத்து தரப்பினர் மனதிலும் சித்ரா நுழைந்துவிட்டார்.
இந்த தொடரில், மூன்று அண்ணன் தம்பி தம்பதியர்கள் கதாப்பாத்திரம் இருந்தாலும், மூன்றாவது ஜோடியாக வரும் கதிர் - முல்லை தம்பதியின் ரொமான்ஸும், அவருகளுக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும் தான் ரசிகர்களை சீர்யல் பார்க்க ஈர்க்கிறது, என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இந்த ஜோடியின் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இப்படி முல்லையாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சித்ரா, ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றியவர், பிறகு சில சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் முக்கியமான டிவி நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.
சித்ராவுக்கு என்று தனி ரசிகர் வட்டம் இருப்பதோடு, சமூக வலைதளங்களில் அவருக்காக தனி பட்டாளமே இயங்குகிறது. அவர்கள் சித்ரா குறித்து அனைத்து தகவல்களையும், அவரது சீரியல் எப்பிசோட்கள் மற்றும் அதில் அவர் நடித்த விதம் என அனைத்தையும் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார்கள். அதேபோல், சித்ராவும் ரசிகர்களுடன் அவ்வபோது சமூக வலைதளங்கள் மூலம் பேசுவதோடு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் சித்ரா சாட்டிங் செய்யும் போது ரசிகர் ஒருவர், “அக்கா உங்களது பழைய புகைப்படங்களை வெளியிடுங்கள்” என்று கேட்க, அந்த ரசிகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சித்ராவும் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டார்.
தற்போது இருப்பதை விட, கொழுக்கு மொழுக்கு என்று சித்ரா இருக்கும் அந்த பழைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,


அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...