கொரோனா முன் எச்சரிக்கை மூலம் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை போல, சினிமா பத்திரிகையாளர்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட சினிமா நிருபர்களுக்கு உதவும் வகையில், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி திரட்டி வருகிறது.
அதன்படி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் அஜித்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், நட்டி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குநரும் நடிகருமான கணேஷ் பாபு, தயாரிப்பாளர் பெப்ஸி சிவா, பெப்ஸி அமைப்பு, தயாரிப்பாளர் அக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு, விநியோகஸ்தர்கள் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், அருள்பதி, படூர் ரமேஷ், இசையமைப்பாளர் சத்யா, நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, இயக்குநரும் தயாரிப்பாளருமான சினிஷ் ஆகியோர் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு பணமாகவும், பொருட்களாகவும் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். மேலும், சிலர் நன்கொடை வழங்க இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்த பார்வதி நாயர், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு 750 கிலோ (10 kg x 75) அரிசி வழங்கியுள்ளார்.
மேலும், அஜித் எப்படி அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை வழங்கினாரோ அதுபோன்று பார்வதி நாயரும், சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பெப்ஸி அமைப்புக்கு 1500 கிலோ (10 kg x 150) அரிசியை நன்கொடையாக வழங்கியதோடு, பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் நன்கொடை வழங்கியிருக்கிறார்.
கடினமான சூழ்நிலையில், சினிமா பத்திரிகையாளர்களின் நிலை அறிந்து உதவி செய்த நடிகை பார்வதி நாயருக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தற்போது, தமிழில் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்து வரும் பார்வதி நாயர், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்திலும் நடிப்பதோடு, வெப் சீரிஸ்களிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...