கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் விஜயின் ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கவலையடைந்திருப்பதோடு, ‘மாஸ்டர்’ படக்குழுவினரும் அவ்வபோது தங்களது வருத்தத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
இதற்கிடையே, ‘மாஸ்டர்’ படம் தியேட்டரில் வெளியாகாமல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகப் போவதாக தகவல் ஒன்று கோலிவுட்டில் பரவி வருகிறது. மேலும், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, ‘மாஸ்டர்’ வெளியாக இரண்டு மாதங்கள் ஆகும் என்பது தான் தற்போதைய நிலை. இதனால், படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்றும், பெரிய தொகை கொடுத்து ‘மாஸ்டர்’ படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள், என்றும் பேச்சு அடுபடுகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல விநியோகஸ்தர் ஒருவர், ‘மாஸ்டர்’ இரண்டு மாதமோ அல்லது மூன்று மாதமோ, எத்தனை மாதங்கள் கழித்து வெளியானாலும் தமிழகத்தில் ரூ.40 கோடி வசூல் செய்யும், என்று கணித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...