நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த படம் ‘கோலமாவு கோகிலா’.கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் சின்னத்திரை பிரபலம் ஜாக்குலின் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவர் நயன்தாராவின் தங்கை வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க தொடங்கியிருக்கும் ஜாக்குலின், சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், கோரானா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வீட்டில் இருக்கும் நடிகை ஜாக்குலின், தனது வீட்டு அருகே உணவு இன்றி சுற்றி திரியும் தெரு நாய்களுக்காக தனது வீட்டு அருகே ஒரு இடத்தில் உணவு வைத்திருக்கிறார். அதை தெருவில் சுற்றி திரியும் நாய்களும் சாப்பிட்டுள்ளது.
இதற்கு, ஜாக்குலினின் பக்கத்து வீட்டில் இருப்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஜாக்குலினுக்கும் அவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு ஜாக்குலின் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அந்த நபர் ஜாக்குலினின் வீடு புகுந்து அவரை தாக்கியதோடு, ஜாக்குலினின் மதத்தை குறிப்பிட்டு தவறாக பேசியுள்ளார். இதனால் சோகமான ஜாக்குலின் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...