கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும் தங்களைப் பற்றிய செய்திகளை வைரலாக்குவதில் சினிமா பிரபலங்கள் ஆக்டிவாக இருக்கிறார்கள். கொரோனா விழிப்புணர்வு பாடல், அறிவுரை, ஊரடங்கு நாட்களை எப்படி பயனுதுள்ளதாக மாற்றுவது என பல்வேறு வகையில் நடிகர், நடிகைகள் தங்களை எப்போதும் லைம்லைட்டில் வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், நடிகை ரேஷ்மாவும் அவ்வபோது தன்னைப் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். சில சமயங்களில், ரசிகர்களுடன் ஆன்லைன் மூலமாகவும் பேசி வருகிறார்.
ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ரேஷ்மா, பிறகு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நிலையில், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதில் அவர், சூரியுடன் சேர்ந்து செய்த “புஷ்பா புருஷன் யாரு” என்ற நகைச்சுவை பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், ரேஷ்மாவும் பிரபலமடைந்தார்.
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டதால் மேலும் பிரபலமடைந்த ரேஷ்மா, பற்றிய ரகசியமும் வெளியானது. ஆம், ரேஷ்மா திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்ற உண்மை தெரிய வந்ததோடு, அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.
இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரேஷ்மா, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் வீட்டில் இருக்கும் ரேஷ்மா, சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, வீட்டில் தனியாக தான் இருக்கிறேன், என்றும் பதிவிட்டார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தில் சிகரெட் பாக்கெட் ஒன்று இருந்தது. இதை கவனித்த ரசிகர்கள், “வீட்டில் தனியாக இருக்கேன் என்று சொல்கிறீர்கள். ஆனால், சிகரெட் பாக்கெட் இருக்கிறதே, அது யாருடையது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அது தன்னுடையது தான், என்பதை தெரிந்துக் கொண்டே, இப்படி ஒரு கேள்வியை எழுப்பும் இந்த ரசிகர்களால் பெரிய வம்பாகிவிட்டதே, என்ற ரேஷ்மாவின் மைண்ட் வாய்ஸை புரிந்தக் கொண்ட ரசிகர்கள், அவரின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...