தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தென் இந்திய நடிகைகளிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை, என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பவர், சோலோ ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடிப்பதோடு, ‘மூக்கித்தி அம்மன்’ என்ற படத்தின் மூலம் முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கிறார்.
சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளை ருசித்த நயன்தாரா நிஜ வாழ்க்கையில் சில தோல்விகளை சந்தித்திருக்கிறார். குறிப்பாக காதலில் அவர தொடர் தோல்விகளை பார்த்திருக்கிறார். சிம்பு, மற்றும் திருமணமான பிரபு தேவா என இருவருடனான அவரது காதல் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் மூன்றாவது காதலோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.
தனது காதல் பற்றியும், காதல் தோல்வி பற்றியும் எங்கும் பேசாத நயன்தாரா, முன்பு ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன் காதல் தோல்வி குறித்து பேசினார். அதாவது, ”நம்பிக்கை இல்லாத காரணத்தினாலே பிரிய வேண்டிய நிலை உருவானது. எந்த ஒரு காதலிலும் நம்பிக்கை வேண்டும், அது இல்லை என்றால் தனியாக கூட வாழலாம், அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது.” என்று நயன்தாரா அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் பழைய செய்திகளை ரசிகர்கள் தூசி தட்டி வரும் நிலையில், எப்போதோ நயன்தாரா அளித்த அந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...