நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தற்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் இதுவரை ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் ஹிட் என்றாலும், வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே ஹீரோவாக நடிப்பது, என்ற கொள்கையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, யோகி பாபுவும், சந்தானமும் இணைந்து நடித்த ‘டகால்டி’ படத்தை தயாரித்த எஸ்.பி. சவுத்தரி, அடுத்து தயாரிக்கும் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிப்பதோடு, படத்திற்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறாராம். ஏன், படத்தையும் அவர் தான் இயக்கப் போவதகாவும், பேருக்கு வேறு ஒரு இயக்குநர் பெயரை டைடில் கார்டில் போட இருப்பதாகவும் தகவல் உலா வருகிறது.
இந்த நிலையில், யோகி பாபு கதை எழுதி நடிக்கும் படத்தில் நயன்தாராவை முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்களாம். இதற்காக நயனிட யோகி பாபுவே கால்ஷீட் கேட்டிருக்கிறாராம். அதே சமயம், அவர் மறுத்தால், அடுத்த சாய்ஸாக காஜல் அகர்வாலிடம் தேதி கேட்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
ஏற்கனவே, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை விரட்டி விரட்டி காதலிக்கும் வேடத்தில் நடித்த யோகி பாபு, அப்படத்தில் அவருடன் ஒரு டூயாட் பாடலிலும் ஆடி பாடினார். அப்பாடலும், அதில் யோகி பாபு போட்ட டான்ஸ் ஸ்டெப்பும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுமட்டும் இன்றி, நயன்தாராவுக்கும் யோகி பாபுவின் பர்பாமன்ஸ் பிடித்துப் போக, அவரது அடுத்தடுத்த படங்களிலும் யோகியை சிபாரிசு செய்தார். இதனால், யோகி பாபுக்கு நயன் நிச்சயம் கால்ஷீட் கொடுப்பார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...