விஜயின் ‘மாஸ்டர்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையால் ரிலீஸ் தள்ளிப் போனது. அதே சமயம், கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தீவிரம் அடைவதால் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.
இதன் காரணமாக, வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா தாக்கம் குறைந்தபாடியில்லை. இதனால், இந்த ஊரடங்கு மே மாதம் வரை போக வாய்ப்பு இருப்பதாகவும், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி கொரோனாவால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு புறம் இருக்க, பல கோடி வியாபாரம் கொண்ட ‘மாஸ்டர்’ படமும் கொரோனாவால் தியேட்டரில் வெளியாக சூழல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள்.
இந்த நிலையில், கொரோனா பிரச்சினை போடப்பட்டிருக்கும் ஊரடங்கு மே 3 ஆம் தேதிக்கு முடிவுக்கு வந்து விட்டால், மே மாதம் இறுதியில் தியேட்டர்களை திறந்து சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய, தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.
மே மாதம் இறுதியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தை அவரது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். காரணம், விஜயின் ‘மாஸ்டர்’ எப்போது ரிலீஸ் செய்தாலும், மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்று சில விநியோகஸ்தர்கள் கணித்துள்ளதால், இழப்பை சந்தித்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு ’மாஸ்டர்’ லாபம் கொடுக்கும் என்பது தானாம்.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...