கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உரைந்திருக்கிறது. இதில், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், பலர் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை என்றாலும், இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அரசு கொரோனாவை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டினாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்த நிலையில், பிரபல நடிகை ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரே கொரோனா வைரஸால் பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேஷா, பட வாய்ப்புகள் குறைந்ததால், தனது காதலரான ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரே கோஷேவ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு ஸ்ரேயாவுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால், அவர் இந்தியாவில் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், அவரது கணவருக்கு கொரோனா பாதித்திருப்பது திரையுலகினர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதால், நடிகை ஸ்ரேயாவையும் அரசு நிச்சயம் தனிமைப்படுத்தியிருக்கும். ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதா?, என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
தமிழில் ‘சண்டக்காரி’ என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...