அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் தீபாவளியன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.
விஜயின் 62 வது படமாக உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில், “ஸ்பைடர் படத்துடனேயே விஜயின் 62 வது படத்திற்கான பணிகளையும் நான் தொடங்கிவிட்டேன். கதை முழுவதுமாக உருவாகி விட்டது. படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஸ்பைடர் ரிலீஸிற்கு பிறகு விஜயின் 62 வது படம் குறித்த முழுமையான தகவல்களை வெளியிடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...