கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது போல், சினிமா துறையும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது. இருந்தாலும், பாதித்த மக்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் பல பிரபலங்கள் உதவி செய்து வருவதோடு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், ‘உதிர்’ திரைப்படத்தை தயாரித்து இயக்கும் ஞான ஆரோக்கிய ராஜா, தனது ‘உதிர்’ படக்குழு சார்பில் வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
என்னதான் அரசு மக்களை காக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், சிலர் அதை புரிந்துக் கொள்ளாமலும், நோயின் வீரியம் குறித்து அறியாமல் இருக்கிறார்கள். அப்படி அறியாத அவர்களால் பிறருக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது, என்பதை அனைத்து தரப்பினரிடமும் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும், என்று விரும்பிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஞான ஆரோக்கிய ராஜா, வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, கொரோனாவில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்பதற்கான வழிமுறைகள கொண்ட நோட்டீஸ் மட்டும் இன்றி, நம் பாதுகாப்புக்காக மருத்துவ துறையும், காவல் துறையும் எவ்வாறு பணியாற்றுகிறார்கள், அவர்களின் உத்தரவுக்கு மக்கள் கீழ்படிவதன் அவசியம் குறித்த நோட்டீஸ், என்று இரண்டு விதமான நோட்டீஸ்களை மக்களிடம் நேரடியாக விநியோகம் செய்ய இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா முடிவு செய்துள்ளார்.
விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்வது அனைவரும் செய்யும் ஒரு விஷயம் என்றாலும், அதை செய்யும் முறையை இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா வித்தியாசமாக யோசித்திருக்கிறார்.
ஆம், தேவதைகளைப் போல பெண்கள் உடை அணிந்து மக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகம் செய்ய உள்ளார்கள். மக்களுக்கு எதையும் ஒரு ரசனையோடு சொன்னால் தான் எளிதில் சென்றடையும், என்பதால் இப்படி ஒரு திட்டம் போட்டிருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, அதே சமயம், கொரோனா தொற்றின் வீரியம் பற்றி மக்களிடம் எச்சரிக்கையை ஏற்படுத்துவதற்காக, எமதர்மராஜா மற்றும் சித்திரகுப்தர் வேடம் போட்ட கலைஞர்களையும் களத்தில் இறகப்போகிறாராம்.
தேவதைகள் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு போக, அவர்களுக்கு பின்னால் வரும் எமதர்மராஜா, நோட்டீஸில் இருக்கும் வழிமுறைகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும், அப்படி கடைப்பிடிக்காதவர்களின் கணக்கை முடித்து விடுவேன், என்று எச்சரிப்பார். அவருடன் வரும் சித்ரகுப்தரும், கையில் கணக்கு நோட்டுடன் மக்களை எச்சரித்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவாராம்.
இந்த் விழிப்புணர்வு பிரச்சாரத்தை விரைவில் சென்னையில் தொடங்க இருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, பிறகு மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி ஆகிய பகுதிகளிலும் மேற்கொள்ள இருக்கிறார்.
இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, பள்ளியில் படிக்கும் போதே டி.ராஜேந்தரின் படங்களை பார்த்துவிட்டு அவரைப் போலவே சூப்பர் ஹிட் பாடல்களுடன் படம் இயக்கி தயாரிக்க வேண்டும், என்று நினைத்தவர், அந்நாள் முதல் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டு பயணித்தவர் தற்போது அதில் வெற்றி பெற்றிருக்கும் ஞான ஆரோக்கிய ராஜா, ‘உதிர்’ படம் இயக்குநராக் அறிமுகமாவததோடு, அப்படத்திற்கு பாடல்களும் எழுதியிருக்கிறார்.
டி.ராஜேந்தர் பாணியில் காதல் மூலம் மக்களை உருக வைக்கும் விதத்தில் உருவாகும் ‘உதிர்’ படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் வகையில் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருக்கிறது. மேலும், படத்தின் காமெடி காட்சிகளும் பெரும் வரவேற்பு பெரும் வகையில் அமைந்திருக்கிறது. காரணம், படத்தில் 20 நகைச்சுவை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களை மூன்று பாககங்களாக பிரித்து காமெடி காட்சிகள் வடிவமைத்திருப்பதால், படம் முழுவதும் காமெடி காட்சிகள் நிறைந்திருக்கிறது.
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கியராஜா,
புகழேந்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ‘உதிர்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கொரோனா பாதிப்பால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஞான ஆரோக்கிய ராஜா, மேற்கொள்ள இருக்கும் கொரோனா விழிப்புணர்வு பணிக்கு படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...