’துப்பறிவாளன் 2’ படம் மூலம் இயக்குநர் மிஷ்கினுக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், விஷால் மிஷ்கின் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதோடு, அவரை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க கூடாது, என்றும் எச்சரித்தார். அதே சமயம், விஷாலின் குற்றச்சாட்டுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்த இயக்குநர் மிஷ்கின், விஷாலை பொருக்கி என்று திட்டினார்.
இதற்கு பிறகு, மிஷ்கின் மற்றும் விஷால் இருவரும் இது தொடர்பாக வேறு எங்கேயும் பேசாமல் அமைதியானதோடு, அவர் அவர் வேலையிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்கள். அதன்படி, மிஷ்கின் தனது புதுப்படத்தை தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே, மிஷ்கின் சிம்புவை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு இயக்குநர் மிஷ்கின் கூட்டணி உறுதியாகியுள்ளது. மிஷ்கின் சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்துப் போக, அக்கதைக்கு முழு திரைக்கதை எழுதும் பணியையும் இயக்குநர் மிஷ்கி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு முடிவடைந்து திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் போது, இயக்குநர் மிஷ்கினும் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் அளவுக்கு தயாராக இருக்கிறாராம். ஆனால், ‘மாநாடு’ படம் இருப்பதால், அப்படத்தின் படப்பிடிப்பை பொருத்தே, மிஷ்கினின் படம் தொடங்குவது குறித்து சிம்பு முடிவு செய்ய இருக்கிறாராம்.
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...