கொரொனா பாதிப்பால் சினிமா மற்றும் ஊடகத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறுவனம் சாராத சினிமா நிருபர்களும், புகைப்பட நிருபர்கள் மற்றும் வீடியோ நிருபர்கள், மூத்த சினிமா நிருபர்கள் என ஏராளமானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கொடூரமான கொரோனா மூலம் வறுமையில் சிக்கிக் கொண்டிருக்கும் சினிமா நிருபர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலர், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் மூலம் பொருட்களாகவும், பணமாகவும் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல ஸ்டண்ட் இயக்குநரும், வில்லன் நடிகருமான ஸ்டண்ட் சில்வா சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு அள்ளிக் கொடுக்கும் விதமாக ரூ.1 லட்சம் நிதி வழங்கி, தான் சினிமாவில் மட்டும் தான் வில்லன், நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார்.
இந்தியாவையே தனது ‘பாகுபலி’ படம் மூலம் வியக்க வைத்த எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ’யமடூங்கா’ (Yamadonga) படம் மூலம் சண்டைப்பயிற்சி இயக்குநராக அறிமுகமான சில்வா, தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியதோடு, தற்போதும் பல மொழிகளில் பணியாற்றி வருகிறார்.
அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ரஜினிகாந்த், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், பிரித்விராஜ், மோகன்லால், மம்மூட்டி என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கு பிடித்த பேவரைட் ஸ்டண்ட் மாஸ்டரான சில்வாவிடம் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின், செயற்குகுழு உறுப்பினர் சரண், சினிமா பத்திரிகையாளர்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களது சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு, முடிந்த உதவியை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக்கொண்ட ஸ்டண்ட் சில்வா, எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ரூ.1 லட்சத்தை நன்கொடையாக இன்று வழங்கியிருக்கிறார். சில்வாவின் இந்த தாரள குணத்திற்காக ஒட்டு மொத்த சினிமா பத்திரிகையாளர்கள் சார்பாக சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
மேலும், ஆச்சி மசாலா நிறுவனம் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு தனது நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறது.
சுமார் 180 உறுப்பினர்களை கொண்ட சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு, தயாரிப்பாளர் எஸ்.தாணு, தயாரிப்பாளரும் முன்னாள் பெப்ஸி செயலாளருமான சிவா, நடிகர்கள் அஜித், கார்த்தி, சிவகார்த்திகேயன், நடிகரும் இயக்குநருமான கணேஷ் பாபு, நடிகையும் சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு, இயக்குநரும் தயாரிப்பாளருமான சினிஷ், நடிகை பார்வதி நாயர், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், விநியோகஸ்தர்கள் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், படூர் ரமேஷ், அருள்பதி, பெப்ஸி அமைப்பு, இசையமைப்பாளர் சத்யா ஆகியோர் பொருளாகவும், நிதியாகவும் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள்.
இவர்களில் யார் யார் என்ன பொருட்கள் வழங்கியிருக்கிறார்கள், அதன் மதிப்பு என்ன, மற்றும் பணமாக வழங்கியவர்களில், யார் யார், எவ்வளவு தொகை வழங்கியிருக்கிறார்கள், என்பதை ஏற்கனவே சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்தியாக வெளியிடப்பட்டு, அந்த செய்தி பல இணையதள ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...