கொரோனா காரணமாக நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் திருமணம் போன்ற சுபகாரியங்களை தள்ளி வைத்து வருகிறார்கள். ஆனால், சில பணம் படைத்தவர்கள் மட்டும் ஊரடங்கையும் மீறி திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை தடபுடலாக நத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், கர்நாடகவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும், கர்நாடக சினிமாவின் இளம் நடிகருமான நிகிலுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கொரோனா பாதிப்பிலும் நடைபெற்ற இந்த திருமணம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதற்கிடையே, இந்த திருமணனத்தில் 80-க்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டதாகவும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் சமூக விலகலை கடைபிடிக்காததோடு, முக கவசங்கள் அணியாலும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகையான ரவீனா டாண்டன் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டில் ஏராளமானோர் தங்கள் குடும்பங்களோடு சேர முடியாமல் பசி, பட்டினியில் உள்ளனர். அவர்களுக்கு சிலர் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுவெல்லாம் தெரியாததுபோல் சில ஜீவன்கள் இருக்கின்றன. அந்த திருமண நிகழ்ச்சியில் என்ன பரிமாறினார்கள்? என்று நான் யோசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், மற்றொரு பாலிவுட் நடிகர் பரேஸ் ராவால், ஊரடங்கை மீறி இந்த திருமணத்தை நடத்தியவர்கள் போலீஸ் கைது செய்ய வேண்டும். மணமகனும், மணமகளும் சில நாட்கள் சிறையில் இருந்தால் தான் புத்தி வரும், என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...