Latest News :

காதல் படங்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து வசீகரிக்கும் வெண்பா..!
Tuesday September-19 2017

தமிழ்சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்க கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப்பெயருடன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா.

 

சமீபத்தில் வெளியான ‘காதல் கசக்குதையா’ படத்தில் முக்கால்வாசி நேரம் ஸ்கூல் யூனிபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்த கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையை படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார். பள்ளிப்பருவத்திலேயே காதலிக்க துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அழகு.

 

அந்த வெண்பா தான் இப்போது மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்ய தயாராகி விட்டார். ஆம், இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தா கதாநாயகனாக அறிமுகமாகும் 'பள்ளிப்பருவத்திலே' படத்தில் வெண்பா தான் கதாநாயகி. நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுக்கும் வெண்பா தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்.

Related News

645

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery