தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், வியாபார ரீதியாகவும் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். இவரது படங்கள் சுமார் ரூ.250 கோடி வியாபரத்தை கொண்டிருப்பதால், இவரது படங்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, படப்பிடிப்பு முடிவதற்குள் அனைத்து வகையான வியாபரங்களும் முடிவடைந்து புதிய சாதனைப் படைத்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா பிரச்சினையால் வெளியாகவில்லை.
இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி திரட்டி வரும் பெப்ஸி அமைக்குக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்ளிட்ட பலர் நன்கொடை வழங்கிய நிலையில், இதுவரை விஜய் எந்த நன்கொடையும் வழங்கவில்லை. அதேபோல், முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கும் விஜய் நன்கொடை வழங்கவில்லை.
இது தொடர்பாக விஜய் அவ்வபோது சிலரால் விமர்சிக்கப்பட்டாலும், நிச்சயம் விஜய் உதவி செய்வார், என்று சினிமா தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை மூலம் தன்னை மாநில மற்றும் மத்திய அரசுகள் பழிவாங்கியதாகவும், அதனால் அவர்கள் மூலமாக மக்களுக்கு உதவி செய்ய விரும்பாத விஜய், நேரடியாக செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து விஜய் தரப்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், விஜய் இதுவரை சினிமா தொழிலாளர்கள் உதவி செய்யாமல் இருப்பதற்கு காரணம், அவரது வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி வைத்திருப்பது தான், என்ற புதிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...