தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த ‘யோகி’ படம் மூலம் 2009 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான யோகி பாபு, தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்திருப்பதோடு, கையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களையும் வைத்திருக்கிறார்.
சமீபத்தில் வேலூரை சேர்ந்த பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருமணம் செய்துக் கொண்டார். அவரது குலதெய்வ கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டார்கள். இதையடுத்து ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த யோகி பாபு திட்டமிட, கொரோனாவால் அந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது உரடங்கால் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் யோகி பாபு பற்றி இதுவரை யாரும் அறிந்தராத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, யோகி பாபுவின் தந்தை ராணுவ வீரராம். இதனால், யோகி பாபுவும் ராணுவத்தில் சேர விரும்பியதோடு, பெங்களூரில் உள்ள ராணுவ கார்டனில் சில வருடங்கள் பணியாற்றினாராம்.
பிறகு, சினிமாவில் தனது கவனத்தை திருப்பியவர், நடிகராக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்காக சென்னையில் பல கஷ்ட்டங்களை அனுபவித்தவர், தற்போது நடிகராக மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, கோடி கோடியாகவும் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...