Latest News :

’பிக் பாஸ் சீசன் 4’ போட்டியில் பங்கேற்கும் கோலிவுட் கதாநாயகிகள்!
Tuesday April-21 2020

டிவி நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சி பிக் பாஸ் தான். இந்தியில் சுமார் 13 சீசன்களை கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய மூன்று சீசன்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதிலும், மூன்றாவது எப்பிசோட் காதல், தற்கொலை முயற்சி, கோஷ்ட்டி மோதல் என்று அமர்க்களப்படுத்தி விட்டது.

 

இதனால், பிக் பாஸ் போட்டியின் நான்காவது சீசனுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நான்காவது சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வுக்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 பேர் கொண்ட போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று வெளியாகி வைரலானது. ஆனால், அது அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றாலும், அதில் இருக்கும் சில பிரபலங்களிடம் பிக் பாஸ் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4-க்காக கோலிவுட் கதாநாயகிகள் சுனைனா, அமிர்தா, அதுல்யா, ரம்யா பாண்டியன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்திருப்பதாகவும், இவர்கள் அனைவரும் பங்கேற்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Athulya in Big Boss

 

இந்த நான்கு கதாநாயகிகளும் சரியான பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நிலையில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றால் அதன் மூலம் பட வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பிருப்பது என்று கருதியதால், பிக் பாஸ் சீசன் 4-க்கு ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

எது எப்படி இருந்தாலும், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா பிரச்சினை ஓரளவு முடிவுக்கு வந்த பிறகே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Related News

6457

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery